செம்மணி புதைகுழியும் அம்மணியின் ஆட்சியும்!

இன்றுவரை (14-07-2025) செம்மணியில் 65,தமிழரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.
1994, நவம்பர்,12 தொடக்கம் 2005, நவம்பர்,19 வரை 11 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர்  சமாதானப்புறா என அழைக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க அவர் காலத்தில் இடம்பெற்ற இனப்படு கொலை விபரம்:
1. 1995 யூலை 09, நவாலி தேவாலய படுகொலை-131 தமிழர்கள்.
2. 1995 செப்டம்பர்  22 நாகர்கோயில் பாடாசாலை படு கொலை-137  தமிழர்கள்.
3. 1996 செம்மணிப்படுகொலை-140 தமிழர்கள்.
4. 1996 பெப்ரவரி 11 குமரபுரம் படுகொலை -143 தமிழர் கள்.
5. 1996 மார்ச் 16 நாச்சிக்குடா படுகொலை -146, தமிழர்கள்.
6. 1996 மே 17 யாழ் தம்பிராஜ் சந்தை குண்டுவீச்சு-148 தமிழர்கள்.
7. 1996 யூலை 24-மல்லாவி படுகொலை -150 தமிழர்கள்.
8. 1996 செப்டம்பர் 07 கைதடி கிருஷாந்தி உட்பட தமிழினப்படுகொலை -151 தமிழர்கள்.
9. 1996 செப்டம்பர், 1997 ஆகஷ்ட் 15 இரண்டு தினங்கள் வவுனிக்குளம் படுகொலை -160, தமிழர்கள்
10. 1996 செப்டம்பர் 27 கோணாவில் குண்டு வீச்சு படுகொலை-153 தமிழர்கள்.
11. 1997 மே13 முள்ளிவாய்க்கால் படுகொலை-155 தமிழர்கள்.
12. 1997 யூன் 08 மாங்குலம் செல்வீச்சு படுகொலை-156 தமிழர்கள்.
13. 1997 யூலை05 பன்னங்கட்டி படுகொலை-158 தமிழர்கள்.
14. 1997யூலை15 அக்கிராசன் அரசினர் வைத்தியசாலை படுகொலை-159 தமிழர்கள்.
15. 1998பெப்ரவரி01 தம்பலகாமம் படுகொலை-162 தமிழர்.
16. 1998 மார்ச்26 பழைய வட்டக்கச்சி படுகொலை -163 தமிழர்கள்.
17. 1998 யூன்10 சுதந்திரபுரம் படுகொலை -165 தமிழர்கள்.
18. 1998 கிளிநொச்சி நகர் படுகொலை-142 தமிழர்கள்.
19. 1998 நவம்பர் 25 விசுவமடு படுகொலை -167 தமிழர்கள்.
20. 1998 டிசம்பர்02 சுண்டிக்குளம் படுகொலை-169 தமிழர்கள்.
21. 1999 செப்ரம்பர்15மந்துவில் படுகொலை-169 தமிழர்கள்.
22. 1999நவம்பர்03 பாலிநகர் படுகொலை -172 தமிழர்கள்.
23. 1999 நவம்பர்20 மன்னார் மடுதேவாலயம்  படுகொலை- 173 தமிழர்கள்.
24. 2000 அக்கோடபர்25 பிந்துனு வெவ படுகொலை- 177 தமிழர்கள்.
25. 2000 டிசம்பர்11 மிருசிவில் படுகொலை -180 தமிழர்கள்.
ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி 11 வருடங்கள் அதில் முக்கியமான 25 படுகொலைகள் அவரின் ஆட்சியி லேயே இடம்பெற்றது.
சந்திரிகாவின் ஆட்சிக்கு முன்பிருந்த ஐனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர். பிரேமதாஸ, டி வி.விஜயதுங்க, சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து கைமாறிய மகிந்தராசபக்ச, காலத்து இனப் படுகொலைகள் பற்றிய விபரம் இன்னும் ஒரு பதிவில் எதிர் பாருங்கள்.
தற்போது பேசும் பொருளாக மாறியு
ள்ள யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி, சித்துபாத்தி இந்துமயானத்தில் தோண்டப்படும் புதைகுழிகளில் இருந்து இதுவரை சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என 40க்கு மேற்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவைகள் அனைத்தும் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடந் தவை என கூறப்படுவதால் அவருடைய ஆட்சிக் கால படுகொலைகள் மட்டும் அறிவதற்கான பதிவே இது.
இன்னும் எத்தனை எலும்பு கூடுகள் அங்கிருந்து எடுக்கப்படும் என்பதையும் பார்ப் போம்.
இனப்படுகொலை வரலாறுகளை இன் றைய இளைஞர்கள் அறியவேண்டும் என்பதற் காகவே இதனை பதிவிட்டேன்.