உலகின் இரண்டாவது பெரும் பின்னிருக்கை செல்வமாக தங்கம் மாறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரோவின் இடத்தை அது தற்போது பிடித்துள்ளது என கடந்த புதன்கிழமை(11) ஐரோப் பிய ஒன்றியத்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நெருக்கடி காரணமாக பல நாடுகள் தங்கத்தில் முத லீடுகளை மேற்கொள்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தங்கத்தின் கையிருப்பு கடந்த ஆண்டு 1000 தொன்களாக அதிகரித்துள்ளது. அது கடந்த தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். தற்போது அதன் மொத்த கையிருப்பு 36,000 தொன்களாகும்.
இது 1965 ஆம் ஆண்டு நிலையை எட்டியுள்ளது. அமெரிக்க டொலருக்கு அடுத்த நிலையில் இருந்து ஈரோ நாணயத்தின் பின் னிருக்கை நிலையை தங்கம் பின் தள்ளி தற்போது இரண்டாவது நிலையை எட்டியுள்ளது. உலகின் பின்னிருக்கை நாணயமாக 57 வீதம் டொலரே உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 20 வீதமாக தங்கமும், 16 வீதமாக ஈரோ நாணயமும் உள்ளன.
தங்கத்தின் விலை கடந்த வருடம் 30 விகிதம் உயர்ந்திருந்தது. அது தற்போது 28 கிறாம் தங்கத்தின் விலை 3500 டொலர்களாக உள்ளது. எனினும் உலகில் இரண்டாவதாக அதிகம் பயன்படுத்தும் நாணயமாக ஈரோ உள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஸ்ய மோதல்கள், அமெரிக்க – சீனா பொருளாதார மோதல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் என்பன தங்கத்தின் மீது பல நாடுகள் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தியுள்ளன.