இந்தியா: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதிலுள்ள பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுக்கல்லை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய கோர விபத்து இது.
இந்த விபத்து குறித்து அறிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ள பிரிட்டன் அரசு, இது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது