பங்களாதேசத்தின் அரசில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக வும், அதன் இடைக்கால அதிபர் முகம்மட் யூனூஸ் பதவியில் இருந்து அகற்றப்படவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக பங்களதேசம் குற்றம் சுமத்தியுள்ளது.
பங்களாதேசத்தின் அரசுக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே தான் தேர்தலை தற்போது நடத்தாது பிற்போட்டு வருவதாகவும் இந்திய ஊடகங்கள் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக பங்களாதேசத்தின் இடைக்கால அதிபர் யூனூஸின் பிரதம ஆலோசகர் கடந்த செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்துள்ளார்.
பங்களாதேசத்தில் குழப்பங்களை எற்படுத்தி தற்போதைய அரசுக்கு நெருக்கடி களை கொடுக்கும் நோக்கத்துடன் இந்திய ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் பிரச் சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா வின் வலதுசாரி ஊடகங்களே இந்த பொய் பிரச்சாரத்தில் முன்னனி வகிக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யூனூஸ் தேர்லை பின்போட்டு வருவதாகவும், அது அரசுக்குள் உள்ள குழப்பங்களை காண் பிப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. மியான்மருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு நுழைவுப் பாதையை தற்போதைய அரசு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவம் அது அரசுக்குள் குழப்பங் களை தோற்றுவித்துள்ளதாகவும் அவை தெரி வித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் ஐ.நாவின் பொதுச்செயலாளர் பங்களாதேசத்திற்கு பயணம் மேற்கொண்டபோது இது தொடர்பில் ஆராயப் பட்டிருந்தது.
ஆனால் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நடத்தவுள்ளதாக பங்களாதேசம் அறிவித்துள் ளது.
தேர்தலுக்கு முன்னர் நாட்டில் பல மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண் டும் என பங்களாதேச அரசு தொடர்ந்து தெரிவித்துவருகின்றது. கடந்த வருடம் ஹசினா தலைமையிலான பங்களதேசத்து அரசு மாணவர்களின் போரட்டத்தை தொடர்ந்து பதவி யில் இருந்து துரத்தப்பட்டிருந்தது. எனினும் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகின்றது.