வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ் ரேலின் முன் அனுமதியுடன் கடந்த புதன்கிழமை(21) பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு இரா ஜதந்திரிகள் பயணம் செய்த போது இஸ்ரேலிய படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததால் அங்கு பதற்றம் ஏற் பட்டிருந்தது.
இந்த பயணத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் ஒழுங்கு செய் திருந்தனர். கனடா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், யப்பான், பிரே சில் உட்பட 20 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகளின் பயணத்தின் போதே இஸ்ரேல் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து இராஜதந்திரிகள் பாதுகாப்பு தேடி ஓடியதும் காணொளிகளில் பதிவாகியுள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக் கையை பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம்இ அயர்லாந்து உட்பட பல நாடுகள் கண்டித்துள்ளன. மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களின் அவல நிலை குறித்து ஆய்வு செய்ய சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் அனைத்துலக விதிகளை மீறும் செயல் என பலஸ்தீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது குறித்த விசாரணைகள் தேவை எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைகளுக்கான தலைவர் கஜா கலாஸ் தெரிவித்துள்ளார். அதேசமயம், துருக்கி மற்றும் எகிப்த்து ஆகிய நாடுகளும் தமது கடும் கண்டனங் களை தெரிவித்துள்ளன.
இரும்புச் சுவர் என்ற பெயர் கொண்ட படை நடவடிக்கை ஒன்றை இஸ்ரேல் கடந்த ஜனவரி மாதம் மேற்கு கரையில் ஆரம்பித்திருந்தது. இந்த நடவடிக்கையில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் மேற்கு கரையில் உள்ள மிகப்பெரும் அகதிகள் முகாமின் வாசலில் இஸ்ரேல் மிகப்பெரும் ஈரும்பு கதவையும் நிறுவியுள்ளது.