பதிலடி நடவடிக்கையை ‘ஒபரேஷன் பன்யன் மார்ஸ்’ என்று பெயரிட்டது பாகிஸ்தான்!

இந்தியா, பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை ‘ஒபரேஷன் பன்யன் மார்ஸ்’ Operation Bunyan al-Marsoos என்று பெயரிட்டுள்ளது.

அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து தனது வான்வெளியை மூடுவதாக அறிவித்துள்ளது.

26 இடங்களில்  ஆளில்லா விமானங்கள்  காணப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளதை அடுத்து இந்திய நிர்வாக காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் முழுவதும் வெடிப்புகள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்துள்ளன.

இதேவேளை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் நகரில் நடந்த  ஆளில்லா விமானத் தாக்குதலில் மூவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா இலக்கு வைத்ததிலிருந்து இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.