அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா உலங்குவானூர்தி ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஹட்சன் ஆற்றின் மீது உலங்குவானூர்தி பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென உலங்குவானூர்தி ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இறந்தவர்கள் ஸ்பெயின் நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை இன்னும் அரசு உறுதிப்படுத்தவில்லை.



