ஈஸ்டர் குண்டு தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் ஏப்ரல் 21 முன் அம்பலப்படுத்தப்படுவர் – ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பான ஒரு குழு பற்றிய தகவல்களை எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘நாம் எமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்துவருகின்றோம்’.
‘ஊழல், மோசடி மட்டுமல்லாது சகல குற்றங்கள் தொடர்பிலும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலும் முறையாக விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன’ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கைமய, எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய குழுவொன்று தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.