முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசாரணைகளுக்கு அழைப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை – வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலானாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடயங்களை அறிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்படி நாளைய தினம் (31) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டிரான் அலஸ் நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாத்தறை – வெலிகம பகுதியில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டார்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக அங்கு அனுப்பப்பட்டமை தெரியவந்தது.  அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையராக கூறப்படும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் தற்போது முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.