அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பில் இந்தியா கேள்வி

கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் யு.எஸ் எயிட் எனப்படும் உதவி அமைப்பினால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட நிதி களின் விபரங்களை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் வேண்டுகோள் விடுத்துள் ளது.
இந்தியாவில் மேற்கொள் ளப்பட்ட அபிவிருத்தி திட்டங் களுக்கு இலாபமற்ற நிதி என்ற போர்வையில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட இந்த நிதி தொடர்பில் விபரங்களை தாம் கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் அமைச்சர் கிர்டி வர்டன் சிங் கடந்த செவ்வாய்க் கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்காவிடம் இருந்து உத்தியோக பூர்வமான பதிலை தாம் எதிர் பார்ப்பதாக சிங் தெரிவித்தபோதும் இந்தியாவின் கோரிக்கை தொடர்பில் அமெரிக்கா ஈதுவரை பதில் எதனையும் அளிக்கவில்லை.
அமெரிக்க நிறுவனத்தின் நிதி உதவி நல்ல நோக்கத்திற்காக வழங்கப்படுவதாகவே நாம் நினைத்தோம் ஆனால் அவை பல்வேறு தீய நோக்கம் கொண்டவை என்பதை அமெரிக்காவின் புதிய அரசினால் அமைக்கப்
பட்டுள்ள அரசின் வினைத்திறன் தொடர் பில் ஆய்வு செய்யும் இலோன் முஸ்க் தலை மையிலான அமைப்பு கண்டறிந்துள்ளது. எனவே அமெரிக்காவினால் அரச சார்பற்ற நிறு வனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி தொடர்பில் நாம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், இந்திய பொருளாதார புலனாய்வு பிரிவினர் அமெரிக்க உதவி நிறு வனத்தினால் நிதி வழங்கப்பட்ட 8 இடங்களில் திடீர் சோதனைகளை மேற் கொண்டுள்ளனர். அமெரிக்க செல்வந்தரான  ஜோர்ச் சொரோஸின் Open Society Foundations என்னும் அமைப்பினால் நிதி வழங்கப்பட்ட நிறுவனங்களும் இதில் அடங்கும். 2023 -2024 ஆண்டு காலப்பகுதிகளில் அமெரிக்காவின் உதவி நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கு 750 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.