அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதுடன், அமெரிக்கா இந்த வருடம் பொருளாதார வீழச்சியை சந்திக்கும் ஆபத்திலும் உள்ளதாக அமெரிக்காவின் முன்னணி முதலீ ட்டு வங்கியான ஜே.பி.மோர் கன் வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் பெருமள வில் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு அமெரிக்கா அதிக வரியை நிர்ணயித்துள்ளது அதன் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.
இந்த வருடம் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி என்பது 40 விகிதங்கள் சாத்தியமானதாக உள்ளது. அடுத்த மாதம் வரிகள் நடைமுறைக்கு வரும்போது இந்த எதிர்வுகூறல் மேலும் அதிகரிக்கலாம் என வங்கியின் பிரதம பொருளியல் நிபுணர் புறூஸ் கஸ்மான் கடந்த புதன்கிழமை(12) சிங்கப்பூரில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரம் தான் தற்போது பேசுபொருளாக உள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்காவின் பொருளாதார வீழச்சி 30 விகிதம் சாத்தியமாக இருந்தது. அது தற்போது 40 விகிதமாக அதிகரித்துள்ளது. ஏப்பிரல் மாதம் வரிகள் நடைமுறைக்கு வரும்போது அது 50 விகிதத்தை விட அதிகரிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரம் இந்த வருடம் 2 விகித வளர்ச்சியை காணலாம் என ஜே.பி மோர்கன் தெரிவித்துள்ள அதேசமயம், அது 1.7 விகித வளர்ச்சியை காணலாம் என கோல்மன் சற்சி என்ற நிறுவனமும், 1.5 விகித வளர்ச்சியை காணலாம் என மேர்கன் ஸ்ரான்லி என்ற நிறுவனமும் தெரிவித்துள்ளன. இந்த வாரம் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழச்சியினால் பல நிறுவனங்கள் 1.7 றில்லியன் டொலர்களை இழந்திருந்தன.



