ஆயுத உற்பத்திக்கு மாறும் ஜேர்மனின் பிரபல கார் நிறுவனம்

மோட்டார் வாகன உற்பத்தியில் 1937ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் உலகில் முன்னணி நிறுவனமான வொக்ஸ்வெகன் கார் உற்பத்தி நிறுவனம்,  தற்போது பெரும் வீழ்ச்சியை கண்டு வரும் நிலையில் அது ஆயுத உற்பத் தியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கான ஆயுத விநி யோகத்தை அமெரிக்கா நிறுத்தியதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றி யம் தனது பாதுகாப்பு செலவீனத்தை 870 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்
தின் அறிவிப்பைத் தொடர்ந்து வொக்ஸ்வெகன் கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அதன் பிரதம பணிப்பாளர் ஒலிவர் புளுமி தாம் ஆயுத உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக கடந்த செவ்வாய்க் கிழமை(11) தெரிவித்துள்ளார்.
வொக்ஸ்வெகன் நிறுவனம் கடந்த வருடம் மோட்டார் வாகன விற்பனையில் பெரும் வீழ்ச்சியை கண்டிருந்தது. சில உற்பத்தி நிலையங்களை அது வரலாற்றில் முதல் தடவையாக மூடியிருந்ததுடன், பணியாளர்களையும் வேலை யில் இருந்து நிறுத்தி யிருந்தது.
2023 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் ஜேர்மனின் பொருளாதாரமே அதிகபாதிப்பை சந்தித்திருந்தது. அது 0.3 விகிதமாக சுருங்கியிருந்தது. 2024 ஆம் ஆண்டும் அது முன்னேற்றத்தை காணவில்லை. ரஸ்யாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மலிவான எரிபொருட்களை ஜேர்மன் அரசு தடை செய்த பின்னர் அமெரிக்கா வில் இருந்து விலை உயர்ந்த எரிபொருட்களை வாங்கியதால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது.
இரண்டாவது உலகப்போரின் போதும் இந்த நிறுவனம் வி-1 எனப்படும் குருஸ் ஏவுகணை களுக்குரிய உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்து ஜேர்மன் அரசுக்கு வழங்கியிருந்தது.