பொருளாதாரம் மற்றும் சமாதான நிறுவகத்தின் வருடாந்த உலகளாவிய பயங்கரவாத குறிகாட்டியில் பூஜ்ஜிய புள்ளிகளுடன் இலங்கை 100ஆவது இடத்தைப் பிடித்ததுள்ளதுடன், பயங்கரவாதத்தின் தாக்கம் இல்லாத நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய பயங்கரவாத குறிகாட்டி என்பது 163 நாடுகளில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்யும் ஒரு விரிவான ஆய்வாகும். அதற்கமைய, இந்த குறிகாட்டியில் இலங்கை ஒரு வருடத்திற்குள் 64 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டிற்குள் பயங்கரவாத அச்சுறுத்தல்களின் அபாயம் குறைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த குறிகாட்டி ஒரு நாட்டிற்குள் பயங்கரவாத நடவடிக்கையின் அளவு, நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை, இறப்புகள், காயமடைந்தோரின் எண்ணிக்கை மற்றும் பொருள் சேதத்தின் அளவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
அதன்படி, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
2023ஆம் ஆண்டில் இந்தக் குறிகாட்டியில் இலங்கை 36ஆவது இடத்தில் இருந்தது.
இந்தநிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை பொருளாதாரம் மற்றும் சமாதான நிறுவகம் பெயரிட்டுள்ளது.



