தத்தெடுத்த இரண்டு வயது குழந்தையைச் சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக ஒரு தம்பதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் மார்ச் 6ம் திகதி மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, கொலை செய்தது நிரூபிக்கப்பட்ட மாளிகாவாத்தையை சேர்ந்த முகமது அலி முகமது உஸ்மான், முகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பகுதியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததாக முகமது அலி முகமது உஸ்மான், முகமது ஃபாஹிம் ஃபாத்திமா சிஃபானா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நீண்ட நாட்கள் நடந்த வழக்கில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



