நெடுங்கேணி வெடுக்குநாறிமலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. நேற்று புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.
கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்யமுற்ப்பட்ட 8பேர் நெடுங்கேணி காவல்துறையினரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிசாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தது.



