ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்ட எகிப்து – அமெரிக்கா எச்சரிக்கை

182
172 Views

ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எகிப்தின் முடிவை எதிர்த்து பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்புள்ள இருபது ‘Su-35’ ஜெற் விமானங்களை வாங்க எகிப்து  ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில் ரஷ்யாவுடனான எகிப்தின் ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எகிப்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.

அக்கடிதத்தில், “ரஷ்யாவுடனான எகிப்து மேற்கொண்டுள்ள ஆயுத ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் அமெரிக்கா, எகிப்துக்கு அளிக்கும் பாதுகாப்பு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு உறவைச் சிக்கலாகும்“ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், எகிப்து மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வடக்கு சிரியாவில் குர்துகள் மீது தாக்குதல் நடத்த துருக்கி, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணையை வாங்கியது. இதற்காக துருக்கிக்கு அமெரிக்கா தரப்பில் அழுத்தம் தரப்பட்டது.

மேலும் ட்ரம்ப் – ஏர்டோகனின் சமீபத்திய சந்திப்பில், வடக்கு சிரியாவில் குர்துகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா எஸ் – 400 ஏவுகணையை அந்நாட்டிடமிருந்து துருக்கி வாங்கியது குறித்து பேசப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here