‘போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது புலனாய்வு பிரிவு மற்றும் அரச தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர்’ என்று தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற அச்சுறுத்தல்களால் பல பட்டதாரிகள் போராட்டத்திலிருந்து ஒதுங்குகின்றனர்’.
‘இருப்பினும் எமக்கான வேலைக்காக நாங்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்’ என்று தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தெரிவித்துள்ளார்.
‘தொலைபேசி அழைப்புகள் ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன’.
‘நாங்கள் அரசுக்கு எதிராக போராடவில்லை’. ‘எனினும் அரசுக்கு எதிராக செயற்பட வேண்டாம், போராட்டம் செய்ய வேண்டாம்’ என ஒரு தரப்பினர் தடுக்கின்றனர்’ என்று தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ‘புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்துவது கடந்த காலத்திலேயே காணப்பட்டதாக’ குறிப்பிட்டுள்ளார்.
‘அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை உள்ளது’. ‘போராடுவதற்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல் விடுப்பதில்லை’. அவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பார்களாக இருந்தால் அது குறித்து தங்களுக்கு தெரியப்படுத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



