ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடத்தப்படும் ஈரோவிசன்(Eurovision) எனப்படும் அனைத்துலக இசை நிகழ்ச்சிப் போட்டிக்கு பதிலாக இன்ரவிசன் (Intervision Song Contest in 2025) எனப்படும் அனைத்து
லக இசை நிகழ்ச்சியை மிகவும் பெருமெடுப்பில் நடத்து வதற்கு ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் கடந்த திங்கட்கிழமை(3) ஒப்பு தலை வழங்கியுள்ளார்.
இந்த வருடம் செப்ரம்பர் மாதமளவில் ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இந்த இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஈரோவிசன் என்ற நிகழ்வு European Broadcasting Union (EBU) என்ற நிறுவனத் தால் 1950 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த அமைப்பு அரசியல் நலன் சார்ந்து இயங்கிவருகின்றதாக பல நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
2022 ஆம் ஆண்டு உக்ரைனுக்கும் ரஸ்யா வுக்குமிடையில் மோதல்கள் ஆரம்பமாகியதும் ரஸ்ய கலைஞர்களை இந்த இசைநிகழ்ச்சியை நடத்தும் அமைப்பு தடை செய்திருந்தது எனினும் காசாவில் மிகப்பெரும் இனப்படுகொலையை நடத்திய இஸ்ரேலுக்கு அது அனுமதியை வழங் கியிருந்தது. பனிப்போர் காலத்தின்போது 1965 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையில் ஈரோவிசனுக்கு மாற்றீடாக ஒரு அனைத்துலக இசை நிகழ்வை அன்றைய சோவித்து ஒன்றியம், கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லாவாக்கியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் நடத்தியிருந்தன.
இந்த புதிய அனைத்துலக இசை நிகழ்வில் பிறிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த நாடுகள், பொதுநலவாய நாடுகளில் சுதந்திரக் கூட்ட மைப்பு எனப்படும் சி.ஐ.எஸ் அமைப்பில் உள்ள நாடுகள் மற்றும் விருப்பமுள்ள ஏனைய நாடுகள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இந்த கலைநிகழ்வில் அரசியலுக்கு இடமில்லை என இதனை உருவாக்கிவரும் ரஸ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
2023 ஆம் ஆண்டு இந்த திட்டம் முன் வைக்கப்பட்டபோது லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 25 இற்கு மேற்பட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்ததாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லாரோவ் தெரிவித்துள்ளார்.



