காசா பகுதியில் உள்ள மக்களை பலவந்தமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர வைப்பது என்பது மிகவும் கண்ட னத்திற்குரியது என்பதுடன், அது அனைத்துலக விதிகளின் அடிப்படையில் கடுமையாக தடை செய்
யப்பட்டது ஒன்று. இது ஒரு இனச் சுத்தீகரிப்பு என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரொனியோ குற்றெரஸின் பேச்சாளர் ஸ்ரிபென் டுஜாரிக் கடந்த புதன்கிழமை(5) தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களை அவர்களின் இடத்தில் இருந்து அகற்றுவது என்பது மிகவும் மோசமான செயல். நாம் அனைத்துகல விதிகளை மதிக்க வேண்டும். இனச் சுத்திகரிப்பு நிகழ்வதை நாம் தடுக்கவேண்டும். இரு தேசங்கள் என்ற தீர்வில் நாம் உறுதியாக நிற்க வேண்டும்.
மக்களை அவர்களின் நாட் டில் இருந்து பலவந்தமாக நாடு கடத்துவது தடைசெய்யப்பட்டது. அதனை நாம் அனுமதிக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் வோல்கர் ரேக் தெரி வித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவை சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காசாவில் இருந்து மக்களை வெளியேற்று வதும், அந்த இடத்தை அமெரிக்கப் படையினர் கைப்பற்றுவதுடன், இஸ்ரேலியர்களை குடிய மர்த்துவது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது உலகில் கடும் எதிர்ப் பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு எதிராக பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், சவுதி அரேபியா, ஹமாஸ் அமைப்பு, சீனா, எகிப்த்து, துருக்கி, ஸ்பெயின், அயர்லாந்து, ரஸ்யா உட்பட பல நாடுகள் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.



