கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய அளவிலேயே பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி முடிவு

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய அளவான 8 சதவீதத்திலேயே பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பண வீக்க இலக்கை 5 சதவீதமாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு நாணய சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணவீக்கமானது 2025 இன் இரண்டாம் அரையாண்டில் இலக்கிடப்பட்ட மட்டத்தினை நோக்கி வளர்ச்சியடைய ஆரம்பிப்பதற்கு முன்னர் அடுத்த சில மாதங்களுக்கு இந்தப் போக்கு தொடருமென எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.