இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியானது

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் 70 மில்லியன் இலங்கை ரூபாவை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாக கூறி இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து, குறித்த 70 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு ஏற்கனவே, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைத்திருந்தது.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.