‘இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்துடன் தொடர்புடைய கட்டண திருத்தம் தொடர்பில் அந்த நிறுவனத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது’ என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். ‘கடந்த காலத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள கட்டண அளவு அதிகளவானதென அரசாங்கம் கருதுகின்றது’. ‘நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் 0.60 டொலரை விடவும் குறைவான விலைக்கு குறித்த கட்டண அளவை திருத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்;க்கின்றது’ என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
‘எனவே, அதானி நிறுவனத்துடனான குறித்த திட்டம் இரத்து செய்யப்படவில்லை’ என்றும் ‘கட்டண திருத்தம் தொடர்பிலேயே கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது’ என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



