கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை   தீர்ப்பதற்கு குழுஅமைக்க தீர்மானம் – ரவிகரன் எம்.பி தகவல் 

வடபகுதி கடற்றொழிலா ளர்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக   நாடா ளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் (24.01.2025)  வடமா காண எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதி னொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதி
நிதிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக வும் இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள் ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘மேலும்  இக்கலந்துரையா டலில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென் னிலங்கை மீனவர்கள் மற்றும், உள்ளூர் மீனவர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது. அத்தோடு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழு வைப்படகுகளின் இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர் பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது. இந் நிலையிலேயே வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுஒன்றை அமைப்ப தென  தீர்மானிக்கப்பட்டுள்ளது’’ – என்றார்.