சீனாவின் ஆளுகையில் உள்ள சுயாட்சி மாநிலமான தாய் வானுக்கு மேலதிக ஆயுதங்களை புதிய அமெரிக்க அதிபர் டொனா ல்ட் டிறம் அரசு வழங்கும் என அதன் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வற்ஸ் கடந்த செவ்வாய்க்கிழமை(15) வொசிங்ட னில் உள்ள அமைதிக்கான நிறு
வனத்தின் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்துள்ளார்.
தாய்வான் 20 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங் களை கொள்வனவு செய்வதற்கு பணம் செலுத்தியுள்ளது. ஆனால் நாம் அதனை வழங்குவதில் தாமத மாக உள்ளோம். எனவே புதிய அரசின் முதன்மையான பணிகளில் இந்த ஆயுதங்களை விநியோகம் செய்வது இருக்கும்.
ஒரு சமச்சீரற்ற கள முனையை எதிர் கொள்ளும் முக மாக நாம் தாய்வானை பலப் படுத்த வேண்டும். நடமாடும் ஏவுகணைத் தளங் கள், ஆளில்லாத தாக்குதல் விமானங்கள், நவீன கண்காணிப்பு ரடார்கள் என்பவற்றை வழங்கு வதன் மூலம் சீனாவுக்கு அதிக சேதங்களை ஏற்படுத்த முடியும். சீனா தாய்வானை கைப்பற்ற முயன்றால் சீனா கடுமையான விலையை செலுத்தவேண்டி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட புதிய Norwegian-made Advanced Surface-to-Air Missile Systems (NASAMS) எனப்படும் ஏவுகணைத் தொகுதியை தீவின் வடக்கு பகுதியில் நிறுத்தப்போதவதாக கடந்த வாரம் தாய்வானின் பாதுகாப்பு அமைச் சகம் தெரிவித்திருந்தது.
சீனாவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் தேசியவாதப் படையினர் தோற்கடிக் கப்பட்ட பின்னர் அவர்கள் இந்த தீவுக்கு துரத்தப்டடிருந்தனர். அதன் பின்னர் அவர்கள் அந்த தீவில் சுயாட்சி அதிகாரத்தை அமைத்து ஆட்சிபுரிந்து வருகின்றனர்.



