இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமாரதிசநாயக்கவும் ‘ யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறப்படுதல் அவசியம்’ என்பதை ஆதரிக்கவில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் ( 2025) தெரிவித்துள்ளது
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது. ரணில்விக்கிரமசிங்க அரசாஙகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வேளை இலங்கையின் அரசியல் பாதைமாறியது.
திசநாயக்க அதிகளவு சமத்துவமான பொருளாதார கொள்கைகளை முன்வைத்தார்,ஊழலிற்கு எதிராக போராடுவது பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பது உட்பட நீண்டகால மனித உரிமை கரிசனைகளிற்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
எனினும் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் போல 1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறப்படவேண்டும் என்பதை அவர் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.



