தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



