ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பால் அசர்பைஜான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்!

கஜகஸ்தானில் நடந்த பயங்கர விமான விபத்து தொடர்பான அசர்பைஜானின் முதற்கட்ட விசாரணையில், குறித்த விமானம்   சுட்டு வீழ்த்தப்பட்டமை கண்டறியப்பட்டதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 விமானம், புதன்கிழமை தெற்கு ரஷ்யாவில் உள்ள செச்சினியா பிராந்தியத்தின் தலைநகரான க்ரோஸ்னிக்கு செல்லும் போது கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.

இந்த பேரழிவு குறித்த தனது ஆய்வின் கண்டுபிடிப்புகளை அசர்பைஜான் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை.