கணணிகளில் கூகுள் தேடு தளத்திற்கு அடுத்ததாக ரஸ்யா வின் ஜன்டக்ஸ் தேடுதளம் பிரபலம் பெற்றுவருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Cloudflare உலக இணையத்தள சேவை தொடர்பான 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் அதன் பாவனை 17 விகிதமாக அதிகரித்துள் ளது. செயற்கை நுண்ணறிவு பிரி வில் Open Ai என்ற நிறுவனமும், கிறிப்போ நாணயம் தொடர்பில் Binance என்ற நிறுவனமும் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளன.
எனினும் உலகின் தேடு தளங்களில் கூகுள் என்ற தளமே தற்போதும் 88 விகிதமான இடத்தைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் ரஸ்யாவின் Yandex என்ற தளம் 3.1 விகிதமாகவும், சீனாவின் Chinese Baidu என்ற தளம் 2.7 விகிதமாகவும் Microsoft Bing என்ற தளம் 2.6 விகிதமாகவும் உள்ளன.
இந்த வருடம் ரெலிகிராம் சமூகவலைத் தளம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வற்ஸ்ட் அப் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.வைபர் மற்றும் வீசற் ஆகிய தளங்கள் வீழ்ச்சி கண்டுள்ளன.உக்ரைன் போருக்கு பின்னர் ரஸ்யா மீது மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தடை காரணமாக ரஸ்யாவில் அதன் உள்நாட்டு உற்
பத்திப் பொருட்கள் பிரபல மடைந்து வருகின்றன. கூகுள் தேடு தளத்திற்கு பதிலாக Yandex என்ற தளமும், யூரியுப் என்ற தளத்திற்கு பதிலாக RuTube என்ற தளமும், முக நூலுக்குப் பதிலாக vk என்ற தளமும் அங்கு பிரபலமடைந்து வருகின்றன.