ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 3 நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
முதலீடுகளை ஈர்ப்பது, இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிப்பது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தப் பயணத்தின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
மேலும் பேச்சுவார்த்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும் விடயங்கள், எட்டப்படும் இணக்கப்பாடுகள் குறித்து டெல்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், டெல்லி மற்றும் கொழும்புக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக மின்சக்தி துறையில் இந்திய முதலீடுகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தியப் பயணத்தின் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாத முற்பகுதியில் சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி அநுர திட்டமிட்டுள்ளார்.