இலங்கையின் சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திண்மக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊவா மற்றும் வட மாகாணங்களில் செயற்படுத்துவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (KOICA) முன்வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பதுளை மற்றும் வவுனியா மாவட்டங்களில் திண்மக்கழிவு மேலாண்மை முகாமைத்துவத்தின் சவால்களை எதிர்கொள்ள 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் Kim Miyung Jin தெரிவிக்கையில்,
“சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான உலகளாவிய கூட்டாண்மைகளை முன்னேற்றுவதற்கான KOICA இன் அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த திட்டத்தின் ஊடாக இலங்கையுடனான எமது இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம் என தெரிவித்தார்.



