இழப்புக்களுடன் உக்ரைன் பேச்சுக்கு செல்லும் – அமெரிக்க ஊடகம்

ரஸ்யாவினால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஸ்யாவிடம் இழந்து, ரஸ்யாவுடன் பேச்சுக்கு செல்லும் நிலை ஒன்று அடுத்து வரும் சில மாதங்களில் உக்ரை னுக்கு ஏற்படலாம் என தற்போது அமெரிக்க அதிகாரிகள் நம்ப ஆரம் பித்துள்ளனர் என அமெரிக்காவின் முன்னனி ஊடகமான த வொசிங்டன் போஸ்ட் கடந்த செவ்வாய்க்கிழமை(26) தெரிவித் துள்ளது.

டொனால்ட்  ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியேற் கவுள்ளார். அதேசமயம் உக்ரைன் களமுனையில் கடுமையான இழப் புக்களைச் சந்தித்து வருகின்றது. உக்ரைனினால் கைப்பற்றப்பட்ட கேர்க்ஸ் பகுதியையும் ரஸ்யா கைப்பற்றி வருகின்றது. கடந்த 3 வருடங்களுடன் ஒப்பிடும்போது உக்ரைன் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது.

எனவே தான் வெள்ளை மாளிகையின் பல அதிகாரிகள் உக்ரைனை இன்னும் சில மாதங்களில் பேச்சுக்களை நோக்கித் தள்ளப் படலாம் என நம்புகின்றனர். உக்ரைன் தனது நிலங்களையும் ரஸ்யாவுக்கு கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் ரஸ்யாவிடம் நிலங்களை இழப்பதை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டனர்.

ட்ரம்பின் வருகைக்கு முன்னர் உக் ரைனை ஒரு பலமான நிலையில் வைத்து பேச்சுக்களுக்கு அனுப்பவே பைடன் திட்ட மிட்டுள்ளார். எனவே தான் நீண்ட தூர ATACMS போன்ற ஏவுகணைகள் மூலம் ரஸ்யாவின் உட்பகுதிகளுக்குள் தாக்குவதற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட கண்ணிவெடிகளையும் உக்ரை னுக்கு வழங்கியுள்ளார். அதாவது ட்ரம்ப் வரு வதற்கு முன்னர் உக்ரைனுக்கு முன் உள்ள தடைகளை அகற்ற பைடன் முற்பட்டுள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.