அமெரிக்காவின் புதிய அரச தலைவராக தெரிவுசெய்யப் பட்டுள்ள டொனால்ட் டிறம் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைகளின் அதிகாரிகளாக நியமித்துள்ளது என்பது சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எதிர்காலாத்தில் டிறம் எடுக்கப்போகி றாரா என்ற கேள்விகளை எழுப்பி யுள்ளது.
தேசிய புலனாய்வுத்துறை யின் முன்னாள் தலைவர் ஜோன் ரட்கிளிப் சி.ஐ.ஏயின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் படை அதிகாரியும், பொக்ஸ் ஊடகத்தின் ஆய்வாளருமான பீற் ஹெக்செத் பாதுகாப்புச் செயலாளராகவும், புளோரிடா மாநிலத் தின் காங்கிரஸ் சபை உறுப்பினர் மைக்கேல் வற்ஸ் தேசிய பாது காப்பு ஆலோசகராகவும், எலிசே ஸ்ரெபெனிக் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ள னர்.
புளோரிடா மாநிலத்தின் செனட்டர் மார்கோ றுபியோ வெளிவிவகாரச் செயலா ளாராக நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப் படுகின்றது. மேற்கூறப்பட்ட ஐந்து போரும் சீனாவுக்கு எதிரான கடுமையான நிலைப் பாட்டைக் கொண்டவர்கள்.
முன்னைய ஆட்சிக் காலத்தின் போது டிறம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 380 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களின் மீது அதிக வரிகளை விதித்திருந்தார். தற்போதும் அவர் தனது பிரச்சாரங்களில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 விகித வரியையும், ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 தொடக்கம் 20 விகித வரியையும் விதிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
றுபியோ தாய்வானுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். 2027 ஆம் ஆண்டு சீனா தய்வானை ஆக்கிரமிக்கலாம் என்று அமெரிக்க படைத்தளபதிகள் தெரிவித்துவரும் நிலையில் அந்த காலப்பகுதியில் டிறம் ஆட்சியில் இருக்கப்போவது குறிப்பிடத்தக்கது.