காசாவில் கட்டாய இடம்பெயர்வை முன்னெடுக்கும் இஸ்ரேலின் செயல் ஒரு போர்க்குற்றம்: HRW

பாலஸ்தீனியர்கள் காசா பகுதிக்கு திரும்புவதை நிரந்தரமாக தடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது  என மனித    உரிமைகள்  கண்காணிப்பகத்தின் குழு  குற்றம் சுமத்தியுள்ளதோடு, இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர்க்குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவின்  நீர், சுகாதாரம், தகவல் தொடர்பு  மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை இஸ்ரேலியப் படைகள்  அழித்துவிட்டன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும்காசாவின் பெரும்பகுதி மக்கள் வசிக்கத் தகுதியற்றதாக ஆக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.