காஸாவில் இஸ்ரேல் நடத்துவது “இனப்படுகொலை”: சௌதி அரேபியா இளவரசர் கண்டனம்

மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் ரியாத்தில் ஒன்று கூடினர்.

அப்போது பேசிய சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை “இனப்படுகொலை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் அவர் விமர்சித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வலுவாக மறுத்துள்ளது.