கனடாவில் ஹிந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து  கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் இருக்கும் இந்து சபா கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை ‘சகிக்க முடியாதது’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் அவர் வெளியிட்ட பதிவில், “பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை சகிக்க முடியாதது. அனைத்து கனடா மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்விலும் சமூகத்தின் பாதுகாப்பிலும் விழிப்புடன் செயல்பட்ட பீல் பிராந்திய காவல்துறைக்கு (Peel Regional Police) எனது பாராட்டுக்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.