கடந்த 18 வருட காலப்பகுதிகளில் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் இன்று நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

2006 முதல் 2024 வரையான காலப்பகுதிகளில் உலகம் முழுவதும் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பத்தில் 9 கொலை வழக்குகள் நீதித்துறையால் தீர்க்கப்படாமல் இருப்பதாக UNESCOவின் Observatory of Killed Journalists கண்காணிப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கையிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.