“ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்’: பராக் ஒபாமா கருத்து

“ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ்”  என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி   நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தபால் வாக்கு செலுத்தியதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். தற்போது, தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று கூறி வருகிறார்.

இதனிடையே இது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு, குறிப்பிட்டுள்ளதாவது, “அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான எனது வாக்கை தபால் மூலம் செலுத்தினேன். இது என்னுடைய நண்பருக்கு ஹாய் சொல்வதுப் போல எளிமையாக இருந்தது. நீங்களும் என்னை போல  தபால் மூலம் வாக்கு செலுத்த விரும்பினால், இப்போதே வாக்குச்சீட்டை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எதன் மூலம் எப்படி வாக்களித்தாலும், யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை மட்டும் தெளிவாக திட்டமிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.