கடந்த வருடம் கனடாவின் வன் கூவர் பகுதியில் வைத்து சீக்கிய காலிஸ்த்தான் அமைப்பைச் சேர்ந்த ஹாதீப் சிங் கொல்லப்பட்டது தொடர்பில் ஐந்து கண்கள் என்ற புலனாய்வு அமைப்பின் தகவல்களை ஆதாரமாக பயன் படுத்தப்போவதாக கனேடிய பிரதமர் கடந்த புதன்கிழமை(16) விசார ணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கும்போது தெரிவித்துள்ளார்.
ஐந்து கண்கள் என்ற புலனாய்வு அமைப்பு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை கொண்ட கூட்டான அமைப்பாகும்.
எனது புலனாய்வு அமைப் பின் தகவல்களின் அடிப்படையில் ஹாதீப் சிங் நிஜாரை படுகொலை செய்தது இந்தியாவே. கனேடிய மண்ணில் வன்முறைகளை இந் தியா மேற்கொண்டு வருகின்றது என ஹொக் விசாரணைக் குழுவிடம் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய மண்ணில் வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தல் தொடர் பான விசாரணைகளை இந்த குழு மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவுகள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக நாம் இந்திய புலனாய்வுத்துறையின் உதவியை முதலில் நாடியிருந்தோம். ஆனால் இந்தியா மறுத்துவிட்டது. ஜி-20 மாநாட்டிலும் நான் இது தொடர்பில் இந்திய பிரதமர் மோடியுடன் பேசியிருந்தேன். ஆனால் அவர் அதனை கருத்தில் எடுக்கவில்லை.
எம்மிடம் புலனாய்வுத் தகவல்களே உள்ளன. வலுவான சான்றுகள் இல்லை, ஆனால் சான்றுகளை ஐந்து கண்கள் என்ற புலனாய்வு அமைப்பிடம் இருந்து பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான விரிசல்களைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை(14) கனேடிய மண்ணில் குற்றச் செயல்கள் புரிந்ததாக கூறி இந்திய இராஜதந்திரிகள் சிலரை கனடா நாடு கடத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவும் கனேடிய இராஜதந்திரிகளை நாடுகடத்தியிருந்தது. கனடாவில் 18 இலட்சம் சீக்கிய மக்கள் வாழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது.