வறுமையில் வாடும் 1.1 பில்லியன் மக்கள் -ஐ.நா

உலகில் 1.1 பில்லியன் மக்கள் பட்டினியை எதிர் கொண்டுள்ளனர் எனவும், அவர்களில் அரைப் பங்கிற்கு மேற் பட்டவர்கள் போர்கள் நடைபெறும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என வும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிறுவனம் கடந்த வியாழக்கிழமை(17) வெளியிட்டு ள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து  குறைபாடு, மின்சாரவசதியின்மை, குடிநீர் தட்டுப் பாடு, சுத்தமான கழிப்பிட வசதிகள் அற்றநிலை என்பன அதில் முக்கியமானவை. 112 நாடுகளில் 6.3 பில் லியன் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வறுமையில் வாடும் 1.1 பில்லியன் மக்களில் 455 மில்லியன் மக்கள் போர் நடைபெறும் அல்லது நடை பெற்ற நாடுகளில் வாழ்பவர்கள்.

18 வயதுக்கு குறைவான 584 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். உலகில் உள்ள சிறுவர் தொகையில் இது 27.9 விகிதமாகும். வயது வந்தவர்களில் 13.5 விகிதமானவர்கள் பட்டினியில் வாழ்கின்றனர். சிறுவர்களின் இறப்பு விகிதம் ஏனைய நாடுகளில் 1.1 விகிதமாக இருக்கின்றபோதும், போர் இடம்பெறும் நாடுகளில் 8 விகிதமாக உள்ளது.

வறுமையில் வாழ்பவர்களில் 82.3 விகித மானவர்கள் ஆபிரிக்கா மற்றும் தென் னாசிய நாடுக ளைச் சேர்ந்தவர்கள் என அந்த அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளது.