முதலில் சீர்திருத்தம், அதன் பிறகே தேர்தல்: வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ்

வங்கதேசத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் அது தவறாகிவிடும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள முகம்மது யூனுஸ், “நாங்கள் யாரும் நீண்ட காலம் அதிகாரத்தில் இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சீர்திருத்தங்கள் முக்கியமானவை. தேர்தலை நடத்துங்கள் என்று சொன்னால் நாங்கள் தேர்தலை நடத்த தயார். ஆனால் முதலில் தேர்தலை நடத்துவது தவறு.

வங்கதேசத்தில் பொது நிர்வாகம் என்பது முற்றிலும் சீர்குலைந்துள்ளது. எதேச்சதிகாரம் திரும்புவதைத் தடுக்க விரிவான மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. சீர்திருத்தங்கள் என்பது கடந்த காலத்தில் நடந்ததை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு தடுப்பதற்கான அமைப்பை கட்டமைப்பதுதான்” என்றார்.