இந்திய வெளிவிவகார அமைச்ச ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு

ஒரு நாள் உத்தியோகபூர்வ  பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்  ஜெய்சங்கருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பு ஒன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதில்,இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து விஜித ஹேரத்திற்கு உறுதியளித்தேன் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளை  பூர்த்தி செய்துள்ளேன்.  இந்திய இலங்கை கூட்டுறவின் பல்வேறு பரிமாணங்களை மதிப்பாய்வு  செய்தோம்.  அயல்நாடுகளிற்கு முன்னுரிமை,எங்கள் இரு நாடுகளின் உறவுகளின் முன்னேறத்தை எப்போதும் வழிநடத்தும் என  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்