இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்ற பின்னர் டெல்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியடைந்துள்ளார்.
இந்த வெற்றியை தொடர்ந்து முதல் இராஜதந்திர சந்திப்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட அநுரகுமாரவை நேற்று இரவு நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
இதன்போது பதவியேற்ற பின்னர் டில்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.