மியான்மார், காசா மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் முஸ்லீம் மக்கள் துன்பத்தை சந்திக்கும் போது நாம் அமைதியாக இருப்பது ஒரு முஸ்லீம் குடி மகனுக்கு ஏற்றதல்ல என ஈரானின் ஆன்மீகத் தலைவர் சாயிட் அலி கொசினி ஹமேனி தெரிவித் துள்ளார். இஸ்லாம் மதத்திற்கு எதிரானவர்கள் எப்போதும் எம்மை முஸ்லீம்களாக ஒன்றிணைய வைக்கின்றனர். உலகில் உள்ள நாடுகளில் முஸ்லீம் மக்கள் பாதிக் கப்படும்போது நாம் அதனை பார்த் துக்கொண்டிருக்க முடியாது என அவர் தனது ருவிட்டர் தளத்தில் இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
எனினும் ஹமேனியின் கருத் துக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு தவறான தக வல், இவ்வாறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் குறிப்பிட்ட நாடுகள் தமது நாட்டில் உள்ள சிறுபான்மை இன மக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என சிந்திக்க வேண்டும் என இந்திய வெளிவிவ கார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்துள்ளது.
இதற்கு முன்னரும் இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன் முறைகள் தொடர்பில் ஹமேனி கருத்துகளை வெளியிட்டே வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டு டில்லியில் ஏற்பட்ட வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தபோதும் அதனை அவர் முஸ்லீம் மக்கள் மீதான படுகொலை எனவும் உலகில் உள்ள முஸ்லீம் நாடுகளில் இருந்து இந்தியா தனிமைப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
2019 ஆம் ஆண்டு கஸ்மீரில் உள்ள முஸ்லீம் மக்களின் காணி அதிகாரத்தின் 370 ஆவது சரத்தை இந்தியா நீக்கியதற்கும் அவர் தனது கவலையை வெளியிட்டிருந்தார்.
