1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ம் திகதி இன்றைய தினம் தியாக தீபம் திலீபன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நிலை போராட்டத்தை ஆரம்பித்த 5ம் நாள் ஆகும்.
இந்த 5ம் நாளில், வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் படிக்கும் தியாக தீபம், போர்வைக்குள்ளே புதைந்து கிடந்தார்.