தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம் சிங்கள அரசாங்கத்தையில்லை,என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சாரத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் என தெரிவித்துள்ளார்.
222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்,அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.



