‘நமக்காக நாம்’ பரப்புரை யாழில் தீவிரம்!

PHOTO 2024 09 07 20 23 11  'நமக்காக நாம்' பரப்புரை யாழில் தீவிரம்!

தமிழ்ப் பொதுவேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி கடந்த தினங்களில் பரவலாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் நகர் பகுதி, வடமராட்சி கிழக்கு, வலிகாமம், தென்மராட்சி பிரதேசங்களில் ‘நமக்காக நாம்’ பரப்புரை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது நாடளுமன்ற உறுப்பினர் சித்தார்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஐதீபன், முன்னாள் வலி தெற்கு பிரதேசபை தவிசாளர் தர்ஷன் மற்றும் தமிழரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கலையமுதன் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டுள்ளனர்.