ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று: Pafferal அமைப்பு தகவல்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 05 மணிவரை முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.

இந்த நிகழ்ச்சியானது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவர்களின் கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இதுவரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சர்வஜன அதிகார கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.