இஸ்ரேலிய படை துப்பாக்கிச் சூடு: காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்திய WFP

WFP suspends Gaza movement after vehicle hit by bullets near Israeli  checkpoint | Arab News

இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து  காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

Gaza aid deliveries paused amid 'incredible level of desperation' | Israel- Gaza war | The Guardian

இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டத்தின் தலைவர் சின்டி மக்கெய்ன் காசாவில் தனது அமைப்பின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தைஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான சம்பவங்களில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மோதல் தவிர்ப்பு முறை தோல்வியடைந்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.