பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் சார்ந்த தகவல்கள், மோசடி ஆகிய விவகாரங்களில் சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைக்க தவறியதாகவும் டெலிகிராம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெலிகிராம் செயலி குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தவில்லை என்று டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி துரோவ் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றச்சாட்டு தொடர்பாக வடக்கு பாரிஸ் விமான நிலையத்தில் துரோவ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் நிறுவனம், அவரிடம் மறைத்து வைக்க எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.