இந்திய கடற்படைக்கு புதிய 4 ரஸ்ய போர்க்கப்பல்கள்!

ரஸ்ய கடற்படையின் பிரதான கட்டளை அதிகாரியான அலக்ஸ் சாண்டர் மொய்சீவ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய கடற்படைத்தளபதி உட்பட பல உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொண்டு ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டினை சந்தித்த சில வாரங்களில் இந்த பயணம் அமைந்துள்ளது.

இரு நாட்டு கடற்படையின ரும் இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் தமது ஆளுமையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்ததாகவும், இரு கடற் படையினரும் இணைந்து செயற் படுவது தொடர்பிலும் இந்த சந்திப் பில் பேசப்பட்டதாக இந்திய ஊடகங்கள் கடந்த செவ்வாய் கிழமை(20) தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு ஆயுத விநியோகம் பெருமளவான ஆயுதங்கள் ரஸ்யாவி டம் இருந்து தான் கொள்வனவு செய்யப்படு கின்றது. இந்த நிலையில் இந்திய கடற்படையின் பலத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரிக்கும் நோக்கத்துடன் இரண்டு பிரிகேற் வகை கடற்படைக் கப்பல்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ரஸ்யா திட்டமிட்டுள்ளது. முதலாவது கப்பல் அடுத்த மாதமும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியிலும் வழங்கப்படவள்ளன. மேலும் இரண்டு கப்பல் களை இரு நாடுகளும் இணைந்து கட்டவுள்ளன.

அதேசமயம் இந்தியாவினால் 5.43 பில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய் யப்பட்ட நான்கு எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளில் இரண்டு மிக விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.